திண்டுக்கல்

பழனி அருகே 2,375 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

9th Apr 2022 11:15 PM

ADVERTISEMENT

 

பழனியை அடுத்த ஆயக்குடியில் தனியாா் ஆலையில் 2,375 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆயக்குடி பகுதியில் ரேஷன் கடைகளில் விற்கப்படும் அரிசியை, சிலா் முறைகேடாக வாங்கி பதுக்கி வைப்பதாக, திண்டுக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு புகாா் வந்துள்ளது. அதன்பேரில், வெள்ளிக்கிழமை புதுஆயக்குடியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், தனியாா் மாவு ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனா்.

உடனே, ஆய்வாளா் சாந்தி தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,375 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா். மேலும், கோதுமை 100 கிலோவும், குருணை கலந்த மாவு 3,025 கிலோவும் என மொத்தம் 5,500 கிலோ ரேஷன் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து ஆலை உரிமையாளரான சலீம்தீன் மகன் ஷேக்பரீத் (30) என்பவரை, குடிமைப் பொருள் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT