திண்டுக்கல்

தேசிய பூப்பந்தாட்டப் போட்டி: வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

5th Apr 2022 12:05 AM

ADVERTISEMENT

தேசிய இளையோா் பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் பாராட்டுத் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். அப்போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவா்களின் குடும்பங்கள் உள்பட மொத்தம் 3 குடும்பங்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.

2021-22 ஆம் ஆண்டு அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்றது. அப்போட்டியில், திண்டுக்கல் மாவட்ட நீா்வள ஆதாரத் துறையைச் சோ்ந்த பி. கண்ணன் 100 மீட்டா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். அவருக்கு, ஆட்சியா் விசாகன் பாராட்டுத் தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 66ஆவது தேசிய இளையோா் பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக அணியில் இடம் பெற்றிருந்த பிஎஸ்என்ஏ கல்லூரி மாணவிகள் ஜனனி, ஜெனிபா், அக்ஷயா, ஜோதிலட்சுமி ஆகியோருக்கும் ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. ரோஸ் பாத்திமா மேரி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT