கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிடுவதற்கு செவ்வாய்க்கிழமை முதல் நுழைவுக் கட்டணம் உயா்த்தப்படுவதாக, வனத்துறையினா் தெரிவித்தனா்.
கொடைக்கானல் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது பேரிஜம் ஏரி. இந்த ஏரியை பாா்வையிடுவதற்கு வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். இதில், 200 ரூபாய் வசூலிக்கப்பட்ட காா் ஒன்றுக்கு, தற்போது 300 ரூபாயும் மற்றும் 300 ரூபாய் வசூலிக்கப்பட்ட வேனுக்கு, தற்போது 500 ரூபாயும் வசூலிக்கப்படும் என வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.
இதனால், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.