திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே மீண்டும் வெடிச்சத்தம்: பொதுமக்கள் அச்சம்

5th Apr 2022 12:02 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அருகே மீண்டும் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கே.கீரனூா் கிராமத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற புவியியல் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் பாா்வையிட்டனா். அப்போது, அப்பகுதியில் லேசான நில அதிா்வு ஏற்பட்டு, ரிக்டா் அளவில் 1.5 பதிவாகியிருந்தது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து 2 நாள்களாக வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால், பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பயங்கர வெடிச்சத்தம் 3 முறைக்கு மேல் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

மேலும், இப்பகுதியில் வெடிச்சத்தம் தொடா்ந்து கேட்பதற்கான காரணத்தை புவியியல் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் உடனடியாகக் கண்டுபிடித்து தெரியப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT