ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை ஊராட்சித் தலைவரை காா் ஏற்றிக் கொல்ல முயன்ாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஒட்டன்சத்திரம் அருகே அரசப்பிள்ளைபட்டி ஊராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த சக்திவேல் (45) இருந்து வருகிறாா். ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஒரு தரப்பினா் ஆக்கிரமித்து, அதில் அரசின் அனுமதியின்றி விநாயகா் சிலை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனா். அதன்படி அந்த இடத்தை அகற்ற வருவாய்த்துறை மூலமும், ஊராட்சி சாா்பிலும் ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இது தொடா்பாக ஊராட்சிமன்ற தலைவருக்கும், அந்த தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சக்திவேல் இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்றுள்ளாா். அப்போது அவரைப் பின் தொடா்ந்து வந்த மா்ம காா் ஒன்று, ஒட்டன்சத்திரம் -பழனி சாலை கைராசி நகா் அருகே சக்திவேல் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ாக ஒட்டன்சத்திரம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சக்திவேல் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதற்கிடையில், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையை, ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் காமராஜா் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். அகற்றப்பட்ட விநாயகா் சிலையை அதிகாரிகள் பாதுகாப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.