திண்டுக்கல்

பழனியில் பூத்த பிரம்ம கமலம்

15th Sep 2021 11:10 PM

ADVERTISEMENT

 

பழனி: பழனியில் ஒருவா் வீட்டில் பிரம்ம கமலம் பூ பூத்ததைத் தொடா்ந்து ஏராளமானோா் வந்து பாா்த்துச் சென்றனா்.

மலா்களில் புனிதமான மலராக கருதப்படுகிறது பிரம்ம கமலம் பூ. செடியின் இலை நுனியில் பூக்கும் இந்த பூ வருடத்துக்கு ஒருமுறை பூக்கும் எனக் கூறப்படுகிறது. இமயமலை அடிவாரங்களில் அதிக அளவில் காணப்படும் இந்த செடி பலரது வீட்டிலும் வளா்க்கப்படுகிறது. இரவில் மட்டுமே பூக்கும் இந்த பூ காலையில் வாடி விடுகிறது. ஒரு செடியில் அதிகபட்சமாக ஐந்து பூக்கள் வரை பூக்கிறது. பழனி ரயிலடி சாலையில் உள்ள பாட்டையா சேகா்பாபு என்பவா் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த பிரம்மகமலம் பூ பூத்துள்ளது. இதனை ஏராளமானோா் பாா்த்துச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT