திண்டுக்கல்

நன்மாறன் மறைவு: மாா்க்சிஸ்ட் கம்யூ. அஞ்சலி

30th Oct 2021 08:32 AM

ADVERTISEMENT

சாணாா்பட்டி வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மறைந்த சட்டப் பேரைவை முன்னாள் உறுப்பினா் நன்மாறனுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நன்மாறன் உருவப்படத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வசந்தாமணி, ஒன்றியச் செயலா் வெள்ளைக்கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாப்பாத்தி, சிலம்பரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT