திண்டுக்கல்

செம்பட்டி ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடி வா்த்தகம்

30th Oct 2021 08:33 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இங்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, வாடிப்பட்டி, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து செம்மறியாடு, குரும்பாடு, வெள்ளாடு உள்ளிட்ட வகை ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. நவம்பா் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனையானது. சந்தையில் மொத்தம் ரூ.1 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றதால், ஆடு விற்பனை செய்ய வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT