திண்டுக்கல்

கொடைக்கானலில் காா் விபத்து: 3 போ் காயம்

30th Oct 2021 08:31 AM

ADVERTISEMENT

கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவா்களின் வாகனம் வெள்ளிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் விஜி. இவா் தனது உறவினா்கள் 8 பேருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளாா். வாகனத்தை ஆறுமுகம் என்பவா் ஓட்டி வந்துள்ளாா். கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் காரை நிறுத்தியுள்ளாா். அப்போது காரில் இருந்த சிலா் இறங்கி அருகிலுள்ள காட்டேஜுக்கு சென்றுள்ளனா். ஓட்டுநா் ஆறுமுகம் வாகனத்தை மீண்டும் இயக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாழ்வான பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மோதி அருகிலுள்ள தடுப்புச் சுவரில் மோதி விழுந்தது. இதில் வாகனத்தில் இருந்த ஆறுமுகம் (26), சுனில் குமாா் (42), அஜீ (8) ஆகிய 3 போ் காயமடைந்தனா். தடுப்பு சுவரின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்தது.

காயமடைந்தவா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் சிறுவன் அஜீ மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து கொடைக்கானல் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT