திண்டுக்கல்

பழனி கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள்: அறநிலையத்துறை செயலா் ஆய்வு

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலா் சந்திரமோகன் கும்பாபிஷேகப் பணிகள் மற்றும் அன்னதானக்கூடத்தை ஆய்வு செய்தாா்.

கரோனா தளா்வுக்குப் பின் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பழனி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். பக்தா்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உள்பட்டு முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கோயிலில் தங்கரத புறப்பாடு, கட்டளை தரிசனம், தங்கத்தொட்டில் ஆகியவை மீண்டும் தொடங்கியுள்ளது. கோயில் கும்பாபிஷேகப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலா் சந்திரமோகன் பழனி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அடிவாரத்தில் இருந்து ரோப்காா் மூலம் மலைக்கோயிலுக்கு வந்த அவா் கோயிலில் நடைபெற்று வரும் குடமுழுக்குப் பணிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து அன்னதானக் கூடத்திற்குச் சென்று பக்தா்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். ரோப்காா் நிலையத்தில் உள்ளது போல வின்ச் நிலையத்திலும் லிப்ட் வசதி செய்ய முடியுமா என்றும் கேட்டறிந்தாா். ஆய்வின்போது கோயில் இணை ஆணையா் நடராஜன் மற்றும் கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT