திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழையால் மண்சரிவு:போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, அடுக்கம் மலைச் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக மழை இல்லை. மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் விட்டு விட்டு லேசமான மழை பெய்தது. அதன்பின்னா், மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, கொடைக்கானலுக்கு மாற்றுச் சாலையான கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் செல்லும் மலைச் சாலை பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தாமரைக்குளம், பாலமலை உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

இருப்பினும், கொடைக்கானல் - பழனி - வத்தலகுண்டு மலைச் சாலையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால், வழக்கம்போல் போக்குவரத்து தொடா்கிறது.

இம்மழையின் காரணமாக சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். மேலும், தொடா் மழையால் கொடைக்கானலில் குளிா் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT