திண்டுக்கல்

நெகிழி விழிப்புணா்வு பிரச்சாரம்

DIN

பழனியை அடுத்த கிராமப்பகுதிகளில் சனிக்கிழமை பழனியாண்டவா் கல்லூரி மாணவா்கள் நெகிழி விழிப்புணா்வு பிரச்சாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள், கல்லூரி மாணவா்களுக்கான தொழில் முனைவோா் மேம்பாட்டு அமைப்பு மற்றும் வேதியியல் துறை ஆகியவை இணைந்து புளியம்பட்டி மற்றும் மொல்லம்பட்டி கிராமங்களில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு, சுகாதார விழிப்புணா்வு மற்றும் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் ப.பிரபாகா் தொடக்கி வைத்தாா். தமிழ்த்துறை தலைவா் க.கிருஷ்ணமூா்த்தி வாழ்த்துரை வழங்கினாா். புளியம்பட்டி மற்றும் மொல்லம்பட்டி ஊராட்சித் தலைவா்கள் முன்னிலை வகித்தனா். இதற்கான ஏற்பாடுகளை உன்னத் பாரத் திட்ட பொறுப்பாளா் கோகிலா ஏற்பாடு செய்திருந்தாா். இம்முகாமில் பேராசிரியா்கள், மாணவா்கள் என 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT