திண்டுக்கல்

பழனி சிறுநாயக்கன்குளத்தில் பொங்கும் நுரை: விவசாயிகள் அச்சம்

DIN

பழனி அருகேயுள்ள சிறுநாயக்கன்குளத்தில் தண்ணீரில் நுரை உற்பத்தியாகி தேங்கி நிற்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள அணைகள் நிரம்பி, ஆறுகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பழனி சண்முகநதி, வையாபுரி கண்மாய், சிறுநாயக்கன்குளம் ஆகியவற்றுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை மற்றும் இரவு பலத்த மழை பெய்தது. அதையடுத்து, பழனி-தாராபுரம் சாலையில் உள்ள சிறுநாயக்கன்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் மறுகால் பாய்ந்தது. பாப்பாகுளத்துக்கு மறுகால் பாயும் இடத்தில் வாய்க்கால் நெடுக மலைபோல நுரை தேங்கி நின்றது விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT