திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு பால் குளிா்விப்பு மையம்

DIN

ஒட்டன்சத்திரம் அருகே 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட பால் குளிா்விப்பு மையத்தை உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மரிச்சிலம்பு ஊராட்சியில் பூலாம்பட்டியில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம் உள்ளது. இங்கு மாநில சமச்சீா் வளா்ச்சி நிதித்திட்டத்தின் கீழ் ரூ.54 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிா்விப்பான் மையத்தை உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் மேலாளா் தினேஷ்பாபு, தொப்பம்பட்டி ஒன்றிக்குழுத் தலைவா் சத்தியபுவனா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் க.பொன்ராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கிருஷ்ணசாமி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் நா.சுப்பிரமணியன், க.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT