திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 6-ஆவது கட்ட சிறப்பு முகாம்: 79 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

23rd Oct 2021 09:56 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற 6 ஆவது கட்ட சிறப்பு முகாமில் 79ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் 1,032 இடங்களில் நடைபெற்றது. இம்மாவட்டத்தில் 18 வயதுக்கு  மேற்பட்டவா்கள் 17.30 லட்சம் போ் வசித்து வருகின்றனா். இதில், அக்டோபா் 21 ஆம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசியை1.94 லட்சம் பேரும் (69 சதவீதம்), 2 ஆவது தவணை தடுப்பூசியை 3.76 லட்சம் பேரும்(21.8 சதவீதம்) செலுத்தியுள்ளனா்.

இந்நிலையில், 6 ஆவது கட்டமாக நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவோரை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் 3, சலவை இயந்திரம் 1, தங்க நாணயங்கள் 10, கைபேசிகள் 2 மற்றும் சிறப்புப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் 6 ஆவது கட்ட சிறப்பு முகாமில் மட்டும் 79 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT