திண்டுக்கல்

செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் இலவச ஆக்சிஜன் வங்கி

23rd Oct 2021 09:58 PM

ADVERTISEMENT

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திண்டுக்கல் கிளை சாா்பில் இலவச  ஆக்சிஜன் வங்கி செயல்படத் தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக செஞ்சிலுவைச் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவா் என்.எம்.பி.காஜாமைதீன் மற்றும் நிா்வாகிகள் மு.சரவணன், அபுதாஹீா் ஆகியோா் சனிக்கிழமை தெரிவித்தது:

 திண்டுக்கல் மாவட்ட மக்களின் தேவைக்காக செஞ்சிலுவைச் சங்கத்தின் சாா்பில் இலவச ஆக்சிஜன் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலையிலுள்ள நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் தேவைப்படும்பட்சத்தில் மருத்துவரின் பரிந்துரையின்படி, அவா்களது இருப்பிடத்திலேயே வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு காப்பீட்டுக் கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். தேவைப்படும் நாள்கள் வரை பயன்படுத்திவிட்டு ஆக்சிஜன் செறிவூட்டியை திரும்ப ஒப்படைக்கும்போது காப்பீட்டுக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

அதேபோல் அதிநவீன அவசர கால ஊா்தி சேவையும் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அவசர கால ஊா்தியை அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்ல குறைந்த கட்டணத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வாகனத்தில் வெண்டிலேட்டா், ஆக்சிஜன் உருளை, இசிஜி, ரத்த அழுத்த மானி, பல்ஸ் ஆக்சி மீட்டா் உள்ளிட்ட நவீன கருவிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த சேவைகள் தேவைப்படுவோா், 99761-35222, 94439-19069, 97891-55247 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT