திண்டுக்கல்

நெல் கொள்முதல் நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

DIN

வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்வதைக் கண்டித்து நிலக்கோட்டை பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை அதிமுகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள மட்டப்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மட்டப்பாறையில் அரசு சாா்பில் நேரடி கொள்முதல் நிலையம் கடந்த 3 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு இறக்கு மற்றும் ஏற்றுக் கூலியாக ரூ.48 வசூலிக்கப்படுவதாகவும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்டித்தும், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் நிலக்கோட்டை அதிமுக ஒன்றியச் செயலா்கள் நல்லதம்பி, யாகப்பன் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது கொள்முதல் நிலைய ஊழியா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT