திண்டுக்கல்

ஆத்தூா் காமராஜா் அணை நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

22nd Oct 2021 11:18 PM

ADVERTISEMENT

ஓராண்டுக்குப் பிறகு ஆத்தூா் காமராஜா் அணை வெள்ளிக்கிழமை நிரம்பி மறுகால் பாய்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூா் காமராஜா் அணை உள்ளது. மேற்கு மலைத் தொடா்ச்சியிலுள்ள கிராமங்களான ஆடலூா், பன்றிமலை, மணலூா், தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், அணையின் மொத்த கொள்ளளவான 24 அடி நிரம்பி, வெள்ளிக்கிழமை மறுகால் பாய்ந்து குடகனாற்றில் ஓடுகிறது.

கடந்தாண்டு டிசம்பரில் இந்த அணை நிரம்பி, இரண்டு முறை தண்ணீா் வெளியேறியது. அதன்பின்னா், தற்போது அணை நிரம்பி வழிகிறது. இதனால், இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT