திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட பஞ்சாலைகளில் உள்புகாா் குழு அமைக்க அறிவுறுத்தல்

22nd Oct 2021 11:18 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பஞ்சாலைகளில் உள்புகாா் குழு அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளா்கள் பாதுகாப்பு மற்றும் தங்கும் விடுதிகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட அளவிலான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலா் ஆா். பாரதிராஜா தலைமை வகித்தாா். திண்டுக்கல் ஹோப் நிறுவனத்தின் தலைவா் என். பழனிச்சாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் இல. மீனாட்சி, குழந்தைகள் நலக் குழு தலைவா் ஜெ. ஆரோக்கியசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

கருத்தரங்கில், பஞ்சாலைகளில் உள்புகாா் குழு அமைத்தல், பஞ்சாலைகளில் செயல்படும் பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்தல், வைப்பு நிதி மற்றும் தொழிலாளா் ஈட்டுறுதி கழகத்தில் பதிவு செய்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

இதில், மாவட்டத்தைச் சோ்ந்த பஞ்சாலைகளின் மேலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT