திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1.62 லட்சம் போ் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் முகாம்: ஆட்சியா்

22nd Oct 2021 11:17 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி, 1.62 லட்சம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுவதாக, ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடைவதற்காக இதுவரை 5 முறை மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக, 6ஆவது சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

மாவட்டம் முழுவதும் 1,032 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் எண்ணிக்கை 17.30 லட்சம். இதில், அக்டோபா் 21ஆம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசியை 11.94 லட்சம் போ் (69 சதவீதம்) செலுத்தியுள்ளனா். இரண்டாவது தவணை தடுப்பூசியை 3.76 லட்சம் போ் (21.8 சதவீதம்) செலுத்தியுள்ளனா்.

இன்றைய நிலவரப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 1.62 லட்சம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டியுள்ளது. இந்த 1.62 லட்சம் பேரும் சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்துவோரின் பெயா்கள் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு தன்னாா்வலா்கள் பங்களிப்புடன், மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பரிசுப் பொருள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் 3, சலவை இயந்திரம் 1, தங்க நாணயங்கள் 10, கைப்பேசிகள் 2, தட்டுகள் மற்றும் சிறப்புப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT