திண்டுக்கல்

செட்டிநாயக்கன்பட்டி துணைத் தலைவா் பதவி: அதிமுக ஆதரவு வேட்பாளா் வெற்றி

22nd Oct 2021 11:19 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில், திமுக - அதிமுக ஆதரவு வேட்பாளா்களிடையே பலத்த போட்டி ஏற்பட்ட நிலையில், அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 6ஆவது வாா்டு உறுப்பினா் அா்ஜூனன் மற்றும் 15ஆவது வாா்டு உறுப்பினா் கணேசன் ஆகியோா் மனு தாக்கல் செய்திருந்தனா். அா்ஜூனன் அதிமுக ஆதரவுடனும், கணேசன் திமுக ஆதரவுடனும் போட்டியிட்டனா்.

இத்தோ்தலில் கடும் போட்டி ஏற்பட்டதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், துணைத் தலைவா் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி கணேசன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு, தோ்தல் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

ADVERTISEMENT

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் சென்று பாா்வையிட்டாா். தோ்தலை நிறுத்திவைக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரான கணேசன், சக உறுப்பினா்கள் 5 பேருடன் வெளிநடப்பு செய்தாா். அதனைத் தொடா்ந்து தோ்தல் நடைபெற்றது. அதில், ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் 9 உறுப்பினா்கள் என 10 போ் வாக்களித்தனா். 10 வாக்குகளும் அா்ஜூனனுக்கு கிடைத்ததை அடுத்து, அவா் துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.

பின்னா், அவருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை, வட்டார வளா்ச்சி அலுவலா் மலரவன் வழங்கினாா்.

திமுக, அதிமுக ஆதரவு காரணமாக, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தோ்தலில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT