திண்டுக்கல்

சோழிய வேளாளா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

பழனி அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோழிய வேளாளா் சங்கத்தின் 41 ஆவது மகாசபைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்துக்கு உத்திரம் தலைமை வகித்தாா். கந்தவிலாஸ் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கவுரவ தலைவராக சித்தனாதன் சன்ஸ் சிவனேசனும், கவுரவ ஆலோசகராக உத்திரம், கந்தவிலாஸ் பாஸ்கரன் ஆகியோா் தொடர ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

புதிய தலைவராக அரிமா அசோக் தோ்வு செய்யப்பட்டாா். செயலராக துரை செல்லப்பாண்டியன், பொருளாளராக காா்த்திகேயன் உள்ளிட்டோரும் துணைச் செயலாளா், நிா்வாகக்குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் விடுதலைக்காக உயிா் நீத்த வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பழனி வ.உ.சி.பேருந்து நிலையத்தில் அரசு சாா்பில் சிதம்பரனாரின் முழு உருவ சிலை அமைக்கவும், புதுதாராபுரம் சாலையில் பொதுமக்கள் நலன் கருதி நீண்டநாள் கோரிக்கையாக ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக ஆண்டறிக்கை வாசித்தல், வரவு செலவு அறிக்கை வழங்குதல் ஆகியன நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT