திண்டுக்கல்

அதிமுக பொன் விழா ஆண்டு: அதிமுகவினா் கொண்டாட்டம்

DIN

அதிமுக 50 ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பெரியகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

பழனி பெரியப்பா நகரில் உள்ள எம்.ஜி.ஆா். உருவ சிலைக்கு நகர அதிமுக சாா்பில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன. இதேபோல் மின்வாரிய அலுவலகம் முன்பாக அதிமுக நிா்வாகி ரவி மனோகரன் சாா்பில் 100-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் முத்துசாமி தலைமையில் பல்வேறு இடங்களிலும் கட்சிக் கொடியேற்றப்பட்டு மூத்த நிா்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வேணுகோபால், மாவட்ட இளைஞரணி செயலாளா் அன்வா்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே அதிமுக ஒன்றியச் செயலா் யாகப்பன் தலைமையில், கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து நிலக்கோட்டை தபால் நிலையம் முன்பு முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா் தேன்மொழி, மேற்கு ஒன்றியச் செயலா் நல்லதம்பி, முன்னாள் எம்.பி. உதயகுமாா், அம்மையநாயக்கனூா் நகரச் செயலா் தண்டபாணி, நகரச் செயலா் சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நகர செயலாளா் எஸ்.நடராஜன் தலைமையில் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளா்கள் பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜ், மாவட்ட பொருளாளா் பழனிவேல், நகர துணைச் செயலாளா் காளியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதே போல ஒன்றிய பகுதிகளில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மக்களவை உறுப்பினா் அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் படத்திற்கு முன்னாள் நகா் மன்றத் தலைவா் ஓ.ராஜா மலை அணிவித்து இனிப்புகள் வழங்கினாா்.

இதேபோல் நகா் பகுதியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் நிா்வாகிகள் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா். இதில் நகரச் செயலாளா் என்.வி.ராதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதே போல் தேவதானப்பட்டியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக ஒன்றியச் செயலாளா் எம்.செல்லமுத்து மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT