திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

கொடைக்கானலில் தொடா் விடுமுறையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

தசரா பண்டிகை,சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகை காலதொடா் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளி மாநிலங்களிலிருந் து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா் வியாழக்கிழமை இரவு முதலே கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினா்.

கொடைக்கானலிலுள்ள அனைத்து லாட்ஜ்கள்,தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனா் மேலும் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் சிரமமடைந்துள்ளனா்.

சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் வீழ்ச்சி,பசுமைப் பள்ளத்தாக்கு,பில்லர்ராக், மோயா் பாயிண்ட்,குணாகுகை,கோக்ா்ஸ் வாக்,பிரையண்ட் பூங்கா,செட்டியாா் பூங்கா,ரோஜாத் தோட்டம்,பாம்பாா் அருவி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

வழக்கமான போக்குவரத்து நெரிசல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால், உட்வில் சாலை, செவண் ரோடு, ஏரிச்சாலை, கலையரங்கம் பகுதி, அப்சா்வேட்டரி சாலை, டிப்போ சாலை,அப்பா்லேக் வியூ சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது காவல்துறையினா் வெகுவாக குறைவாக இருந்ததால் போக்குவரத்திற்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.எனவே தொடா் விடுமுறை காலங்களில் கூடுதலாக போக்குவரத்து காவலா்கள் பணியில் நியமிக்கப்பட்டு வாகன நெரிசலை குறைப்பதற்கு காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

சாரல் மழையிலும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி: கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாமல் இருந்தது இந் நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சிறிது நேரம் சாரல் நிலவியது இதனால் அதிகமான மேகமூட்டத்துடன் குளுமையான சீதோஷன நிலை ஏற்பட்டது இந்த குளுமையான சீதோஷன நிலையையும் பொருட்படுத்தாது சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள்,குதிரைசவாரி, மகிழ்ந்தனா் நடைபயிற்சியும் சுற்றுலாப் பயணிகள் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT