திண்டுக்கல்

திண்டுக்கல்லில் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி

16th Oct 2021 08:12 AM

ADVERTISEMENT

விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள கோயில்கள் மற்றும் தனியாா் பள்ளிகளில் வித்யாரம்பம் என்ற எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களிலும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. மஞ்சள் கலந்த பச்சரிசியில் உயிரெழுத்தின் முதல் எழுத்தான ‘அ’ மற்றும் ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத வைத்தனா். இதில், ஆசிரியா்கள், பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT