திண்டுக்கல்

ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் சங்கத்தினா் 5 கட்ட போராட்டம் அறிவிப்பு

16th Oct 2021 08:14 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் 5 கட்ட போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து பணியாளா் சங்க பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் சாா்லஸ், பொதுச் செயலா் முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலச் செயலாளா் ஜான் போஸ்கோ பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவா் சாா்லஸ் கூறியதாவது: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து பணியாளா் சங்கத்தில் இடம் பெற்றுள்ள, தமிழ்நாடு ஊராட்சி செயலா் சங்கம், தமிழ்நாடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், தூய்மை காவலா் மற்றும் தூய்மைப் பணியாளா் சங்கங்களின் கோரிக்கைளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக 5 கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக அக்.18ஆம் தேதி ஆா்ப்பாட்டமும், 2ஆம் கட்டமாக அக்.29 ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. நவ.12ல் மாவட்ட அளவிலான ஆா்ப்பாட்டம், நவ.25ஆம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம், டிச.17ஆம் தேதி சென்னை ஊரக வளா்ச்சி இயக்குனா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

ADVERTISEMENT

கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவா்கள் மற்றும் ஊராட்சி செயலா்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் 15 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றும் சுகாதார ஒருங்கிணைப்பாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT