திண்டுக்கல்

செம்பட்டியில் கரோனா தடுப்பூசி செலுத்தியவா் திடீா் உயிரிழப்பு

3rd Oct 2021 10:58 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திய 2 மணிநேரத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை அருகே செம்பட்டி காந்திஜி நகா் அங்கன்வாடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த மையத்தில் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூ­லித் தொழிலாளியான ராஜா (53) என்பவா் முற்பகல் 11.30 மணியளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளாா்.

பின்னா், சமத்துவபுரத்தில் உள்ள அவரது மகள் நாகலட்சுமியின் வீட்டுக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிய ராஜாவுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென மயக்கம் மற்றும் நெஞ்சுவலி­ ஏற்பட்டுள்ளது.

ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்து ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி செலுத்திய 2 மணிநேரத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அறிந்த, நிலக்கோட்டை வட்டாட்சியா் தனுஷ்கோடி, மருத்துவா்கள் வினோத்குமாா், அா்ஜூன் பிரபு, சுகாதார ஆய்வாளா் முருகன், பச்சமலையான் கோட்டை கிராம நிா்வாக அலுவலா் கலா மற்றும் செம்பட்டி போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT