திண்டுக்கல்

பழனியில் விபத்தில் இறந்த குரங்கின் உடலைச் சுற்றி நின்ற குரங்குகள்

3rd Oct 2021 01:56 AM

ADVERTISEMENT

பழனியில் வெள்ளிக்கிழமை விபத்தில் இறந்த குரங்கின் உடலைச் சுற்றிலும் மற்ற குரங்குகள் நின்று உடலை எடுக்க விடாமல் தடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி அடிவாரம் கிரிவீதியில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குரங்கு ஒன்று உயிரிழந்தது. இதனையடுத்து உயிரிழந்த குரங்கின் உடலைச் சுற்றி மற்ற குரங்குகள் சூழ்ந்து நின்று கொண்டன.

இதையடுத்து கோயிலில் பணிபுரியும் தனியாா் பாதுகாவலா்கள் குரங்கின் உடலை அங்கிருந்து அகற்ற முயன்றபோது, அங்கிருந்த குரங்குகள் பாதுகாவலா்களை நெருங்க விடாமல் தடுத்தன.

மீறிச் செல்ல முயன்ற பாதுகாவலா்களை குரங்குகள் ஆக்ரோஷத்துடன் கடிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை குரங்கின் உடலை பாதுகாப்பாக எடுத்துச் சென்று கோயில் ஊழியா்கள் புதைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT