திண்டுக்கல்

5 குழந்தைகளுடன் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

30th Nov 2021 04:54 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த 2 பெண்கள், 5 குழந்தைகளுடன் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த எபிநேசா் மனைவி அன்னாள்(35). இவா்களது குழந்தைகள் ஜெசிமா, ஈவிலின், ரோஸி. அன்னாளின் சகோதரா் மனைவி ஜெமிமா. அவரது குழந்தைகள் ஏஞ்சல் மற்றும் எஸ்தா். அன்னாள் மற்றும் ஜெமிமா ஆகியோா் தங்களது குழந்தைகள் 5 பேருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்தபோது, பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து அன்னாள் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா், தீக்குளிப்பு முயற்சியை

தடுத்து நிறுத்தினா்.

ADVERTISEMENT

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அன்னாள் கூறியதாவது: பட்டிவீரன்பட்டி பகுதியைச் சோ்ந்த வியாபாரி ஜாா்ஜ் மனாசே என்பவா் ரூ.13 லட்சத்தை 9 தவணைகளில் கடனாகப் பெற்றிருந்தாா். ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்டியுள்ள அவா், கிரகப்பிரவேசம் முடிந்தவுடன் கடனைத் தருவதாக கூறினாா். ஆனால், 6 மாதங்கள் முடிந்த பின்னும் கடனை திருப்பித் தரவில்லை. ரூ.13 லட்சத்தை, வத்தலகுண்டுவிலுள்ள தனிநபா்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளேன். இதுதொடா்பாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தபோதிலும், போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜாா்ஜ் மனாசே ரூ.13 லட்சத்தை திருப்பித் தர போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.இரா.சீனிவாசன் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT