திண்டுக்கல்

பச்சமலையான் கோட்டையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

DIN

பச்சைமலையான்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் 20 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2019-20-ஆம் ஆண்டிற்கான, ஆய்வுகள் கடந்த 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதற்கான ஒப்புதல் பெறுவதற்கு, சமூகத் தணிக்கை சிறப்பு கிராமசபைக் கூட்டம் செம்பட்டி அருகேயுள்ள மேட்டுப்பட்டி பேத்தரசு அம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பச்சமலையான் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் காளிதாஸ் தலைமை வகித்தாா்.

ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் காளீஸ்வரி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சிறப்பு பாா்வையாளராக நிலக்கோட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி கலந்து கொண்டாா். மேலும், ஊராட்சி மன்றச் செயலா் ஜெயகணேஷ், மற்றும் வாா்டு உறுப்பினா்கள், மக்கள் நலப்பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT