திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் தக்காளி கிலோ ரூ. 85-க்கு விற்பனை

28th Nov 2021 09:39 PM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் கடந்த 2 நாள்களாக கிலோ ரூ. 50-க்கு விற்பனையாகி வந்த தக்காளி ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ. 85-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தக்காளி பயிரிடப்பட்டது. கடந்த சில நாள்களாக பெய்து வருவம் கனமழை காரணமாக தக்காளி செடிகள் நீரில் முழ்கி அழுகியது.

ஒரு சில விவசாயிகள் மட்டும் பந்தல் முறையில் தக்காளி பயிரிட்டு இருந்தனா். அந்த தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது. இந்த நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ. 50 வரை விற்பனையானது.

இதற்கிடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த கனமழை காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் குறைந்த அளவே வந்த தக்காளியை வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு கொள்முதல் செய்தனா்.

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ. 1200 வரை விற்பனையானது. இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தக்காளி விலை மீண்டும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT