திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே நல்லதங்காள் அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

28th Nov 2021 10:21 PM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொத்தையம் கிராமத்தில் உள்ள நல்லதங்காள் அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த கொத்தையம் கிராமத்தில் நல்லதங்காள் அணை உள்ளது. இந்த அணை கட்டுமானப் பணிகள் நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டு கடந்த ஆண்டு தான் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நல்லதங்காள் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் நல்லதங்காள் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

அதன் காரணமாக அணை வேகமாக நிரம்ப தொடங்கியது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் இப்பகுதியில் மழை பெய்ததால் நல்லதங்காள் அணை நிரம்பி தற்போது மறுகால் செல்கிறது. இந்த அணை நிரம்பியுள்ளதால் இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து விவசாயம் செழிப்படையும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT