திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பலத்த மழை: பாறைகள்,மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளிக்கிழமை பாறைகள்,மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது இதனைத் தொடா்ந்து கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா் பகுதியில் வியாழக்கிழமை மாலை 3 மணியில் இருந்து விடிய, விடிய இடி, மின்னல் பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றும் வீசியது.

இதனால் பெரும்பாறை, சித்தரேவு மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு, மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

இதனால் மின் வயா் அறுந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மஞ்சள்பரப்பு பகுதியில் பெய்த கன மழையால் நேற்று இரவு மஞ்சள்பரப்பு-புல்லாவெளி இடையே மரம் வோரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மரத்தை அப்புறபடுத்தினா்.

இன்று அதி காலை புல்லாவெளி-ஏணிக்கல் இடையே 2 இடத்தில் பாறைகள் உருண்டு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் 4?மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறபடுத்தினா். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT