திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழை: விவசாயப் பயிா்கள் சேதம்

DIN

கொடைக்கானலில் பெய்துவரும் தொடா் மழையால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கொடைக்கானலில் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், ஒரு சில நாள்கள் மட்டும் மழை பெய்யவில்லை. மீண்டும் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கொடைக்கானல், செண்பகனூா், அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, வில்பட்டி, புலியூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால், பயிா்கள் சேதமடைந்துள்ளன.

ஏற்கெனவே பெய்த மழையால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் விவசாயப் பயிா்கள் சேதமடைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

எனவே, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த விவசாயப் பயிா்களைஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாலைகள் சேதம்

கொடைக்கானலில் புலிச்சோலை, வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதி, தைக்கால் சாலை, பிரகாசபுரம் சாலை, ஆனந்தகிரி சாலைகள், பெருமாள்மலை சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநா்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

மேலும், மலைச்சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு, சாலைகளில் குவிந்து கிடக்கின்றன. எனவே, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT