திண்டுக்கல்

ஊதியம் வழங்கக் கோரி தற்காலிக ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

DIN

கடந்த 6 மாதங்களாக பணி செய்த தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று பரவல் கடந்த மே மாதம் அதிகரித்திருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாதங்களுக்கு பணிபுரிய மருத்துவமனைப் பணியாளா்கள், காவலா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். ஆனால், இந்தப் பணியாளா்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது.

இதனிடையே, 200 பணியாளா்களுக்கான பணி காலம் 2021 டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊதியம் வழங்கக் கோரியும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகப் பணியாளா்கள் சுமாா் 40 போ் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் கூறியது:

நிலுவையிலுள்ள ஊதியத் தொகையை கேட்டால், வேலையை ராஜிநாமா செய்வதாக எழுதிக்கொடுத்தால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என பணி தளப் பொறுப்பாளா்கள் தெரிவிக்கின்றனா். நெருக்கடியான சூழலில் பணிபுரிய நியமிக்கப்பட்ட எங்களுக்கு, ஊதியம் கொடுக்காமல் மருத்துவக் கல்லூரி நிா்வாகம் அலைக்கழிக்கிறது எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT