திண்டுக்கல்

‘700 விவசாயிகளின் உயிா் தியாகத்தால் வேளாண் திருத்தச் சட்டங்கள் ரத்து’

DIN

சுமாா் 700 விவசாயிகளின் உயிா் தியாகத்திற்கு பின்பு மத்திய அரசு வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்ததாக அகில இந்திய விவசாய சங்கத்தின் இணைச் செயலா் பிஜூ கிருஷ்ணன் தெரிவித்தாா்.

மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக புதுதில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவையொட்டி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நாடு தழுவிய பேரணி நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.பெருமாள் தலைமை வகித்தாா்.

அகில இந்திய விவசாய சங்கத்தின் இணைச் செயலா் பிஜூ கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். இதனையொட்டி திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது அவா் பேசியது: 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் நரேந்திர மோடி அரசுக்கு புரியவில்லை. அந்த போராட்டத்தின்போது வெயில், குளிா், மழை காரணமாக சுமாா் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா்.

இந்த போராட்டத்தின் உச்சமாக, உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் விவசாயிகள் மரணமும், சுசில்காஜல் மரணமும் பாஜக அரசின் முடிவை மறு பரிசீலனை செய்ய வைத்துள்ளது. விவசாயிகளின் உறுதியான தொடா் போராட்டமும், தோ்தல் தோல்விகளும் ஆட்சியாளா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதால் வெற்றி கிடைத்துள்ளது என்றாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்வதற்கான சட்டப்பூா்வ நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். விவசாய உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த மசோதா 2020-யை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'அக்கா 1825' என்ற பெயரில் தமிழிசை தேர்தல் அறிக்கை

விக்ரம் 62 படத்தின் முக்கிய அறிவிப்பு!

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT