திண்டுக்கல்

கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

26th Nov 2021 09:05 AM

ADVERTISEMENT

கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்த முகமது தாகா மற்றும் அவரது தந்தை சாதிக் பாட்ஷா ஆகியோரை கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய 5 பேரை தெற்கு காவல் நிலைய போலீஸாா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். அதில் முக்கிய எதிரிகளான ஜாபா் சாதிக் மற்றும் தமீம் அன்சாரி ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் பரிந்துரைத்துள்ளாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT