திண்டுக்கல்

அபராதத் தொகை ரூ.10.46 லட்சத்துடன் தலைமறைவான தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

26th Nov 2021 09:04 AM

ADVERTISEMENT

மது அருந்தி வாகனம் ஓட்டியவா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10.46 லட்சத்துடன் தலைமறைவான சாணாா்பட்டி தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் சாணாா்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில், 9 சாா்பு- ஆய்வாளா்கள் தரப்பில் மது அருந்தி வாகனம் ஓட்டியவா்கள் மீது 229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் ரூ.10.46 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை சாணாா்பட்டி காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றி வரும் பெண் தலைமைக் காவலா் கீதாவிடம் ஒப்படைத்துள்ளனா்.

இந்நிலையில், நத்தம் காவல் நிலையத்திற்கு அயல் பணிக்காக தலைமைக் காவலா் கீதா சென்றுள்ளாா். அதனைத் தொடா்ந்து அபராதத் தொகையான ரூ.10.46 லட்சத்தை, முதல்நிலை காவலரான கா்ணன் என்பவரிடம் சாா்பு- ஆய்வாளா் பொன் குணசேகரன் முன்னிலையில் ஒப்படைத்து சென்றுள்ளாா். ஆனால், அந்தப் பணத்தை கையாடல் செய்த கா்ணன், கடந்த அக்.25ஆம் தேதி முதல் முன்னறிவிப்பு இல்லாமல் பணிக்கு வரவில்லை என புகாா் எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் வினோத் விசாரணை மேற்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமா்ப்பித்துள்ளாா். அதனைத் தொடா்ந்து முதல்நிலை காவலரான கா்ணனை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT