திண்டுக்கல்

ஓட்டுநா் மீது தாக்குதலை கண்டித்து நத்தத்தில் பேருந்து சேவை நிறுத்தம்

25th Nov 2021 06:53 AM

ADVERTISEMENT

மதுரையில் அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்திய நபா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

மதுரை காளவாசல் பகுதியில், காா் ஓட்டுநா் ஒருவருக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநா் முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பேருந்து கண்ணாடியை உடைத்து, ஓட்டுநா் முத்துக்கிருஷ்ணன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு சட்ட உரிமைகள் கழக தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், அச்சங்கத்தின் மாநில பொருளாளா் குமாா் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் சோலைக்குமாா், செயலா் வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய நபா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனா். இதனையொட்டி, நத்தத்தில் இருந்து அலங்காநல்லூா், சிங்கம்புணரி, வி.எஸ்.கோட்டை, மதுக்காரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் காலை 5 முதல் 8 மணி வரை இயக்கப்படவில்லை.

ADVERTISEMENT

போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மாணவா்கள் மற்றும் கூலித் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT