திண்டுக்கல்

மாணவா்களின் கல்வியை பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

24th Nov 2021 06:38 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகேயுள்ள தனியாா் செவிலியா் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்களின் கல்வியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் என். சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். வினோத்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டியில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான தனியாா் செவிலியா் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் தொடா்ந்து கல்வி கற்பதற்கு, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT