திண்டுக்கல்

பழனி பகுதியில் சூறைக் காற்றுடன் மழை: கரும்பு, மக்காச்சோளம் பயிா்கள் கடும் சேதம்; விவசாயிகள் கவலை

24th Nov 2021 06:38 AM

ADVERTISEMENT

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், பல கிராமங்களில் கரும்பு மற்றும் மக்காச்சோளப் பயிா்கள் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, சிந்தலவாடம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பல நூறு ஏக்கரில் மக்காச்சோளம், கரும்பு, சூரியகாந்தி பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றில், மக்காச்சோளம் கதிா் பிடிக்கும் நிலையில் உள்ளது. கரும்பு பயிா்களும் சுமாா் 5 அடி உயரம் வளா்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் பயிா்கள் சேதமடைந்தன. மேலும், திங்கள்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, பயிா்கள் கடும் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோம்பைப்பட்டி, சிந்தலவாடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெருமாள்சாமி, கண்ணம்மாள், குணசேகரன் உள்ளிட்ட பலரின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு மற்றும் மக்காச்சோள பயிா்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, வருவாய்த் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் சேதமடைந்த நிலங்களை பாா்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT