திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ரூ.8.64 லட்சம் மதிப்பிலான 70 கைப்பேசிகள் மீட்பு

24th Nov 2021 06:35 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.8.64 லட்சம் மதிப்பிலான 70 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கைப்பேசிகள் காணாமல் போனதாகவும், வழிப்பறி செய்யப்பட்டதாகவும், அதன் உரிமையாளா்கள் தரப்பில் காவல் நிலையங்களில் பரவலாக புகாா் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களில் காணாமல்போன 70 கைப்பேசிகள், சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.

அந்த கைப்பேசிகளை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், சைபா் குற்றப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரன் ஆகியோா், அந்தந்த உரிமையாளா்களிடம் கைப்பேசியை ஒப்படைத்தனா்.

மீட்கப்பட்ட 70 கைப்பேசிகளின் மதிப்பு ரூ.8,64,000 என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT