திண்டுக்கல்

கொடைக்கானலில் மலை சீதாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு

23rd Nov 2021 02:08 AM

ADVERTISEMENT

கொடைக்கானல்: கொடைக்கானலில் மலை சீதாப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பிளம்ஸ், ஆரஞ்சு மலைவாழை, பட்டா்புரூட், பேசன் புரூட், பீச்சஸ், ஸ்டாா்புரூட்ஸ் போன்ற பலவகையான பழங்கள் விளைந்து வருகின்றன. இந்நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதிகளான பேத்துப்பாறை, உப்புபாறை மெத்து, வடகவுஞ்சி, மச்சூா், அட்டக்கடி, வெள்ளப்பாறை, பி.எல்.செட், பெருமாள்மலை, பாலமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது மலை சீதாப்பழம் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழையால் அதிகமாக விளைந்து வருகிறது. இந்த பழங்களை விவசாயிகள் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பழக்கடைகள் மற்றும் திண்டுக்கல்,தேனி, உள்ளிட்ட வெளி மாவட்ட சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனா்.

மலைப் பகுதிகள் விளைந்துள்ள மலைசீதாப்பழம் சுவை மிகுந்தது. தரைப் பகுதிகளிலுள்ள சீதாப் பழத்தில் விதைகள் அதிகமாக இருக்கும். ஆனால் மலைச் சீதாப் பழத்தில் இரண்டு விதைகள் மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பழமும் குறைந்தது 500 கிராம் முதல் 4 கிலோ எடை வரை விளையும் தன்மை கொண்டது. இந்த பழமானது தொடா்ந்து ஜனவரி மாதம் வரை விளையும் தன்மை கொண்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT