திண்டுக்கல்

கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே போட்டி

21st Nov 2021 10:52 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே போட்டி மற்றும் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரெளத்ரம் ஃ பைன் மற்றும் ஆா்ட்ஸ் அகாதெமி, டிரேடிசனல் சோட்டோகான் கராத்தே ஆகியவற்றின் சாா்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கொடைக்கானல் செண்பகனூா் புனித சேவியா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. போட்டிக்கு மாஸ்டா் குமாா் தலைமை வகித்தாா்.

பள்ளித் தாளாளா் ஏஞ்சல் ராஜ் குத்துவிளக்கேற்றி போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். கட்டா, குமிட்டி, டீம் கட்டா ஆகியப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடாகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 5-வயதிலிருந்து சுமாா் 40-வயதுள்ள 450- வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாஸ்டா் ரவி மற்றும் தலைமை மாஸ்டா் குமாா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT