திண்டுக்கல்

பழனி கோயிலில் பக்தா்கள் கூட்டம்: நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம்

21st Nov 2021 10:54 PM

ADVERTISEMENT

பழனி மலைக் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தநாளும் சோ்ந்து வந்ததால் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையோடு முகூா்த்த தினமும் சோ்ந்து வந்ததால் அதிகளவில் பக்தா்கள் குவிந்தனா்.

இதனால் ரோப்காா் மற்றும் வின்ச் நிலையத்தில் டிக்கெட் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மலைக்கோயிலிலும் இலவச தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் சாா்பில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். பல இடங்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தாலும் போதிய போலீஸாா் பாதுகாப்புப்பணியில் இல்லாததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT