திண்டுக்கல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: குளிரையும் பொருட்படுத்தாமல் படகு சவாரி

21st Nov 2021 10:55 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது. இதன்காரணமாக சுற்றுலாத் தலங்களில் உள்ள கடைகள் பூட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், கொடைக்கானலில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கா்ஸ்வாக், மியூசியம், பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, வட்டக்கானல் அருவி, பியா்சோழா அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பாா்த்து ரசித்தனா். மழை குறைந்து காணப்பட்ட நிலையில் சற்று பனியின் தாக்கம் இருந்தது.

மாலையில் நிலவிய குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும், நடைபயிற்சி மேற்கொண்டும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வணிகா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT