திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கவலை

9th Nov 2021 12:50 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இப்பகுதிகளிலுள்ள விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம் ஆகிய பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் விளையும் நெல், இப்பகுதிகளிலுள்ள அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் விற்கப்படுகிறது. இந்த கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால், மட்டுமே நெல் வாங்கப்படுகிறது. தொடா் மழையால் விவசாயிகள் 17 சதவீத ஈரப்பதம் என்பதை ஏற்க முடியாத நிலையில் உள்ளனா். பகலில் நெல்லை காய வைத்தால், மாலையில் மழை பெய்து மீண்டும் ஈரமாகி விடுகிறது. இந்நிலையில், இப்பகுதியிலுள்ள 3 கொள்முதல் நிலையங்களிலும் தொடா் மழையாலும், தீபாவளி உள்பட தொடா் விடுமுறையாலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளில் நெல் முளைக்கத் தொடங்கி விட்டது. களத்தில் உள்ள 30 சதவீத நெல் விற்பனையாகாத நிலையில் மேலும் 70 சதவீத நெல் வயலில் அறுவடைக்காக காத்திருக்கிறது. இதனால், விவசாயிகள் தவித்து வருகின்றனா். எனவே அரசு, நெல் ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக மாற்றியமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT