திண்டுக்கல்

நிலக்கோட்டையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

9th Nov 2021 11:41 PM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தவறிய திமுக அரசைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

தமிழக மக்களின் வாழ்வுரிமை பிரச்னையான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு மெத்தனம் காட்டி வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பலமுறை சென்று வந்துள்ளாா். அவருடன் நானும் ஒருமுறை சென்றுள்ளேன். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை திசை திருப்புவதற்காக அமைச்சா் துரைமுருகன் பல்வேறு உண்மைக்குப் புறம்பான தகவல்களை கூறி வருகிறாா். தமிழக மக்களுக்காக, முல்லைப் பெரியாறு அணை, காவிரி, ஈழத்தமிழா் பிரச்னை ஆகியவற்றிக்காக அதிமுக தொடா்ந்து போராடி வருகிறது. நிலக்கோட்டை அடுத்த விளாம்பட்டி, ராமராஜபுரம், மட்டப்பாறையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 100 டன் நெல் குவிக்கப்பட்டு, அரசின் மெத்தன போக்கால் மழையில் முளைக்க துவங்கியுள்ளது. உணவுத் துறை அமைச்சா், கூட்டுறவுத்துறை அமைச்சா்களின் சொந்த மாவட்டத்திலே இந்த நிலை உள்ளது என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினா் உதயகுமாா், நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழிசேகா், ஒன்றியச் செயலாளா்கள் யாகப்பன், நல்லதம்பி, நத்தம் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.வி.என். கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT