திண்டுக்கல்

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.10ஆயிரம் கோடி வழங்க வேண்டும்: ஜோதிமணி எம்பி

9th Nov 2021 08:31 AM

ADVERTISEMENT

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.10ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி கரூா் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், மக்களவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழா வேடசந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. அலுவலகத்தை திறந்து வைத்த கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த காலங்களில் கரூருக்கு வந்தாலும், மக்களவை உறுப்பினரை சந்திக்க முடியாத நிலை இருந்தது. அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநா், தற்போதைய வெள்ளப் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கான நிதியை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரி நிலுவையில் உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கான ஊதியம் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மட்டும் ரூ.10ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். அதன் பின்னா், நிலுவையிலுள்ள நிதிகளையும் வழங்க வேண்டும் என்றாா். அப்போது சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.காந்திராஜன்(திமுக), காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் சாமிநாதன், தா்மா் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT