திண்டுக்கல்

கொடைக்கானலில் நீரோடையில் வெள்ளம்

9th Nov 2021 12:52 AM

ADVERTISEMENT

கொடைக்கானல்: கொடைக்கானல் மூங்கில்காடு நீரோடையில் செல்லும் வெள்ளத்தின் ஆபத்தை உணராமல் திங்கள்கிழமை கிராம மக்கள் கடந்து சென்றனா். எனவே அங்கு தரைப்பாலம் அமைத்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பள்ளங்கி, கோம்பை, மன்னவனூா், கூக்கால், பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைச் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஆனால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில் பள்ளங்கி அருகே உள்ள நீரோடையில் மழைநீா் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் நீரோடையை கடந்து சென்றனா். இதையடுத்து, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகன், நீரோடை பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினாா். அப்போது அப்பகுதி மக்கள், மூங்கில்காடு பகுதியில் தரைப்பாலம் அமைத்துதர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியா் தெரிவித்தாா். இதனிடையே மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT